வவுனியா நகரசபை பிளாஸ்டிக் மீள்கூழற்சியை மேற்கொள்ள ஆவன செய்யவேண்டும் -சமூக ஆர்வலர்கள்

73

நகரசபையினால் பிளாஸ்டிக் மீள்சுழற்சிக்கு பயன்படுத்துவதில்லை சுற்றுச்சுழல் மாசடைவதற்கு அதுவே காரணம். சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டு

வவுனியா நகரசபையிடம் பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிலையம் உள்ள போதிலும் மீள்சுழற்சிக்கு பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதில்லை என தெரியவந்துள்ளது.வவுனியா நகரசபையிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக கோரப்பட்டபோதே இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது நகரசபையிடம் பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிலையம் உள்ளதா என கோரப்பட்டபோது அதற்கு ஆம் என பதிலளித்துள்ள நகரசபை இவ் ஆண்டின் முதல் மூன்று மாதத்திற்கு நகரசபையினால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கில் மீள்சுழற்சிக்கு வழங்கப்பட்ட நிறை தொடர்பில் கேட்கப்பட்டபோது இதுவரை பிளாஸ்டிக் சேகரித்து வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் தனியார் பிளாஸ்டிக் சேகரிக்க நகரசபை அனுமதித்துள்ளதா என கோரப்பட்டதற்கு கேள்வி போதிய விளக்கமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் நகரசபையின் பிளாஸ்டிக் மீள்கூழற்சி நிலையமானது கேள்வி கோரல் மூலம் தனியாருக்கு வழங்கப்பட்டள்ளபோதிலும் நகரசபையினால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்களில் வரும் பிளாஸ்டிக் பொருட்கள் மீள்சுழற்சிக்கு வழங்கப்படாத நிலையில் அவை தனியார் கடைகளுக்கு விற்கப்பட்டு வருவதுடன் ஏனைய பிளாஸ்டிக் பொருட்கள் குப்பை கொட்டும் இடத்தில் போடப்பட்டு எரிக்கப்பட்டு வருகின்றது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே சுற்றுச்சுழல் மாசடைவதை தடுப்பதற்கு நகரசபை பிளாஸ்டிக் மீள்கூழற்சியை மேற்கொள்ள் ஆவன செய்யவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே சுற்றுச்சுழல் மாசடைவதை தடுப்பதற்கு நகரசபை பிளாஸ்டிக் மீள்கூழற்சியை மேற்கொள்ள ஆவன செய்யவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE