மாணவர்களை உடன் விடுதலை செய்து கல்வியை தொடர பல்கலை மாணவர்கள் வேண்டுகோள்

73

யாழ்பல்கலைக்கழக மாணவர்கள்  பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் பல்கலைக்கழக சிற்றுண்டி ஊழியரும்  விடுதலை செய்யப்படவேண்டும் என்று நடைபெற்ற கவணயீர்ப்பு போராட்டத்தில் கலந்து மாணவர்கள் விடுதலைசெய்யப்படவேண்டும் அனைத்து பல்கலைக்கழக

மாணவர் ஒன்றிய உறுப்பினர் தெரிவித்துள்ளார்
ஸ்ரீலங்காஇராணுவத்தினர் எமது பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக நாம் அவர்களை எமது வளாகத்திற்குள்ளே விட்டதால் இராணுவத்தினர் எம்மை பழிவாங்கும் நோக்குடனே எமது மாணவர் ஒன்றிய தலைவர் செயலாளர். சிற்றுண்டி ஊழியர் ஆகியோரை கைது செய்துள்ளனர். இதற்கு அவர்கள் எமது மாணவர் ஒன்றியத்தின் அலுவலகத்தில் இருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தையும் பல்கலைக்கழக மருத்துவ பீட  பழய மாணவர் தியாகதீபம் திலீபன் அவர்களின் புகைப்படத்தையும் காட்டி கைதுசெய்துள்ளார்கள். இதற்காக அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தினூடாக கைது செய்து சிறையில் வைத்துள்ளார்கள். இவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும் . அப்படி செய்தால்தான் மாணவர்கள் நாங்கள் பயமின்றி கல்வி கற்கலாம்  யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒன்றியத்தலைவர்  செல்வன்  அற்புதராசா சங்கீர்த்தன் தெரிவித்துள்ளார்

SHARE