இந்திய விமான தளங்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை!

91

இந்திய விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா ஆகிய விமான தளங்கள் பயங்கரவாதிகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜம்மு – காஷ்மீரின் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதற்கு இந்திய இராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இவ்வாறாக இரு தரப்பிற்கும் இடையே மோதல்களும் பதற்றமும் நீடித்து வருகின்ற நிலையில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் 40இற்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE