சிட்னியில் தர்சனின் சதுரங்க வேட்டை.

680

தர்சன் வீரசிங்கம் எனும் விமான டிக்கெட் முகவர் பல வருடங்களாக
சிட்னி மற்றும் மெல்போர்னில் செயட்பட்டு வந்தார். இவர் ஸ்ரீலங்கா சமூகத்தில் இருந்து குறைந்த விலையில் டிக்கெட் வழங்குவதாக கூறி பல நபர்களில் எதுவித சான்றுகளும் இல்லாது பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு பிறகு டிக்கெட் தருவதாக கூறினார். ஆனால் சில நபர்கள் தொலைபேசி அழைப்பை எடுத்த போது தொலைபேசி இயங்கவில்லை.

மேலும் இவர் பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டை ஆஸ்திரேலியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு தருவதாக டாக்டர் என்ஜினீயர் ஆகியோரிடமிருந்தும் பெற்றுக்கொண்டுள்ளார். இந்த பணம் குறைந்தது $400,000 இருக்கும் என கணிக்கப்படுகிறது. தற்போது சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ளார் என நம்பப்படுகிறது.

இவர் தனது உயர் கல்வியை பம்பலப்பிட்டி ஹிந்து கல்லூரியில் 1995 (A/L) batch ல் கல்விகற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE