பொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்

193

யாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸாரே குண்டை காரினுள் வைத்துவிட்டு, அதனை தாங்கள் வைத்திருந்ததாக கூறி தமது உறவுகளை கைது செய்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வல்வெட்டித்துறையிலிருந்து பொங்கல் திருவிழாவுக்காக நாம் சென்றபோது, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி, வாய் தர்க்கத்தில் பொலிஸார் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்தே வானில் குண்டை வைத்துவிட்டு, எங்கள் மீது குற்றம் சுமத்தியதுடன் எமது உறவுகளை கைது செய்ததாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆகையால் இவ்விடயத்தில் உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுமென கைது செய்யப்பட்டுள்ள ஐவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை  நேற்று (திங்கட்கிழமை) இரவு பொலிஸார்  கைது செய்திருந்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களது வீடுகளையும் வல்வெட்டித்துறையில் பொலிஸார் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE