மூத்த ஊடகவியலாளர் முத்துலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வு நாளை

37

பிரான்சில் நேற்று 20.05.2019 திங்கட்கிழமை சாவடைந்த மூத்த ஊடகவியலாளரும், பன்மொழிபெயற்பாளருமான திரு. அருணாசலம் முத்துலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள் நாளை 22.05.2019 புதன்கிழமை இடம்பெறவுள்ளன.
95 rue Marcel Sembat 93430 Villetaneuse மயானத்தில் காலை 9.30 மணி தொடக்கம் இறுதிக் கிரிகைகள் இடம்பெற்று 13.30 மணிக்கு உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

ஊடகவியலாளர் முத்துலிங்கம் அவர்கள் யாழில் வெளிவரும் பத்திரிகை ஒன்றில் மொழிபெயர்ப்பாளராகவும் நூலகராகவும் நீண்டகாலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது