தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்-யஸ்மின்சூக்கா

96

“என்னைப் பொறுத்தவரையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகவும் பலமானவர்கள். ஆனால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து பணியாற்றுகிறார்களா என்பது எனக்குத் தெரியாது.என தமிழருக்கான மனித உரிமைச்செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் யஸ்மின்சூக்கா தெரிவித்துள்ளார்.

பொதுவாக தாங்கள் மேற்கொள்ளுகின்ற முயற்சியின் மூலம் யார் அதிகமாக சாதிக்கின்றார்கள் என்ற போட்டி மனப்பான்மையே அவர்களுக்கிடையில் காணப்படுகின்றது.

சர்வதேச கடமைகளைப் பொறுத்தவரையில் இலங்கை அரசு தனது பங்கை தான் சரிவர ஆற்றுவதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டுமானால் தமிழ் அமைப்புகள் ஒன்றுபட வேண்டியது கட்டாயமானதாகும்.

தமிழ் அமைப்புக்கள் தாங்கள் வதியும் நாடுகளிலுள்ள அரசுகள் சரியான நடவடிக்கைகள் முன்னெடுக்கும்வண்ணம் இன்னும் அதிகமான அழுத்தத்தை பிரயோகிக்கலாம். இந்தத் தமிழ் அமைப்புக்கள் தங்களது ஆற்றலை பயன்படுத்துகிறார்களா அல்லது அதனை உணர்ந்துகொள்கிறார்களா என்பதுகூட எனக்குத் தெரியாது.

புகைப்படங்கள் எடுப்பதைவிட அதிகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவர்கள் தங்களால் செய்யக்கூடியவற்றையெல்லாம் செய்தார்களா என்றால் இல்லை என்பதே எனது பதில்.”
என யஸ்மின்சூக்கா தெரிவித்துள்ளார்.

SHARE