புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் சென்னை வைத்தியசாலையில் அனுமதி

116

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் சென்னை வைத்தியசாலையில் அனுமதி.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்றுவரும் கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் விதுர்சன் வயது 12 புற்றுநோயினால் பதிக்கப்பட்டு மஹாரகம தேசிய புற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்னை புற்றுநோய் தடுப்பு சிறப்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இவ்விடயம் செய்தியாக பதிவேற்றப்பட்டு பண உதவியும் கோரிய நிலையில் முகநூல் நண்பர்கள், பழைய மாணவர், புலம்பெயர் உறவுகள் என பலரும் தம்மாலான பண உதவிகளை  மேற்கொண்டு வருகின்றனர். 


இதன் காணரமாக பெற்றோரினால் நேற்று முந்தினம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள விதுர்சன் புற்று நோய்சிகிச்சை இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பண உதவிகள் செய்ய முன்வருவோர் அவர்களின் வங்கி கணக்கு இலக்கத்திற்கு பண உதவிகளை செய்யுமாறு கோருகின்றோம். 


தனது வேண்டுகோளினை ஏற்று பல உறவுகள் பண உதவி புரிந்துள்ளதாகவும் இன்னும் உதவிகள் புரிய பலர் முன்வந்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் நீண்ட நாள்கள் உடல் நலமுடன் இருக்க தனது மகன் இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளதாகவும் கண்ணீருடன் தெரிவிக்கின்றார் விதுர்சனின் தாயார்.
தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் மாணவன் விதுர்சன் மிக விரைவில் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டு சுகமடைந்து தாயகம் திரும்ப தாயகத்திலுள்ளவர்கள் உறவுகள் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றார்கள்.

SHARE