வவுனியாவில் போர் வெற்றி கொண்டாடி மகிழ்ந்த சிறீலங்கா இனப்படுகொலையாளி இராணுவம்

90

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களை ஒரு இலட்சத்து நாற்பத்தாறாயிரத்துக்கு மேல் கொன்றொழித்த இனப்படுகொலையாளி மகிந்த தலைமையிலான சிறீலங்கா இனப்படுகொலையாளி இராணுவம் இம்முறையும் தமிழ் மக்களை கொன்றொழித்த மகிழ்ச்சியை வெற்றி விழாவாக தமிழர் தாயகத்தின் மாவட்டமான வவுனியாவில் கொண்டாடி மகிழ்ந்துள்ளது.

இந்த கொண்டாட்டங்கள் பெருமெடுப்பில் வவுனியா மூன்று முறிப்பில் உள்ள வன்னி கட்டளையிடும் பணியகத்தில் நடைபெற்றதுடன் இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் எதையுமே நிறைவேற்றாத சிறீலங்கா அரசாங்கம் இத்தகைய இனப்படுகொலை வெற்றியை கொண்டாடும் கீழ்த்தரமான செயல்களை ஊக்குவிப்பதுடன் மதவாதத்தை ஊக்குவித்து தமிழர் பிரச்சனையை நீத்துப்போகச்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

SHARE