பதவி விலகும் திகதியை பிரதமர் அறிவித்தார்!

122

ஜூன் மாதம் 7 ஆம் திகதி கொன்சர்வேற்றிவ் தலைவர் பதவியிலிருந்து விலகுதாக பிரதமர் தெரேசா மே சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவரே பிரதமராக பதவி வகிப்பதற்கு உரிமையுடைய காரணத்தால் பிரதமர் பதவியிலிருந்தும் தெரேசா மே விலகுவாரென்பது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரெக்ஸிற் மீதான மக்கள் வாக்கெடுப்பின் முடிவை மக்களுக்கு வழங்குவதற்கு தம்மால் இயன்றதை செய்ததாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SHARE