போருக்குப்பின் போராளிகளின் இன்றைய நிலை

752

போருக்குப்பின் போராளிகளின் இன்றைய நிலை

எமது மண்ணில் முள்ளிவாய்க்காலில் போர் முடிந்து காலங்கள் பத்து வருடங்களை கடந்த  கரைந்து கொண்டிருக்கின்றது.

ஒரு இனத்துக்கான விடியலுக்கான பயணத்தில் பயணித்த போராளிகளில் ஒரு தொகை களங்களில் முப்பது வருடங்கள் போராடி மண்ணில் மாவீரர்கள் ஆகிப்போனார்கள் இன்னொரு தொகை போராளிகள் முள்ளிவாய்க்கால்வரை தலைவனோடு விடுதலைக்கான பயணத்தை தொடர்ந்தார்கள் அதில்ஒரு தொகையினர் போரிட்டு விதையானார்கள்  அவர்களுக்கு கல்லறைகள் கூட இல்லை.கடைசி இராணுவ மரியாதை கூட இல்லாதவாறு வல்லரசுகளால் தமிழினத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் ஆங்காங்கு களத்தில் விதைக்கப்படவேண்டிதாயிற்று இன்னும் ஒரு தொகைப்போராளிகள்இறிதிக்கனத்திலும் தலைவரையும் மக்களையும் போராட்டத்தையும் காக்கும் பணியில்  வீழ்ந்து மண்ணோடு மண்ணாக விதையானார்கள்  யார் வீழ்ந்தார்கள் எங்கு வீழ்ந்தார்கள் என்றும் இன்றுவரை ஏங்கும்படியும் ஆகிற்று.

மிகுதிப்போராளிகள் ஆக்கிரமிப்பாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டுயுத்த தர்மத்தையும்மீறி நிராயுமாகநின்ற போராளிகளை சுட்டு கொன்றார்கள் என்னும் ஒரு தொகைப்போராளிகளை முகாம்களில் அடைக்கப்பட்டுசித்திரைவதைகள் செய்யப்பட்டு மெல்லக்கொல்லும் விச ஊசிகள் ஏற்றப்பட்டு நடைப்பிணங்களாக  விடுவிக்கப்பட்டு வாழ்கின்றார்கள்.

இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற போராளிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்.அவர்கள் பயங்கரவாதிகள் என்று இன்னமும் சிறீலங்கா ஒற்றர்களால் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.ஆக்கிரமிப்பாளர்களன்

திறந்த வெளிச்சிறையுள் அந்த போராளிகள் வாழ்கின்றார்கள்.அவர்கள் ஒரு சாதாரண மனிதன் வாழக்கூடிய வாழ்க்கையை கூட வாழமுடியாதபடி அளுத்தங்களுக்கும் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் தங்கள் வாழ்வை கட்டியெழுப்பவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.எந்த மக்களுக்காக ஈழ விடுதலைக்காக போராடினார்களோ அந்த மக்கள் மத்தியில் தமது வாழ்நாளை கொண்டு நகர்த்த பெரும்பாடுகளைபடுகின்றார்கள்.களத்திலேய தன் வாழ்நாளில் பெரும் பகுதியை கழித்த ஒரு போராளி இன்று இந்த சமுகத்தோடு சேர்ந்து பயணிப்பதற்கு எதிர்கொள்கின்ற சவால்கள் மிகப்பெரியன.முப்பது வருடங்களாக காவலரண்களிலும் போர்க்களத்திலும் தம் மக்களை காப்பதற்காக இந்த போராளிகள் தம்மை முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்தார்கள்.அப்பொழுது இந்த சமுகம் அந்த போராளிகளின் அர்ப்பணிப்பில்  பாதுகாப்பான கல்வி பொருளதாரம் மற்றும் பல பலதுறைகளில்  முன்னேறிக்கொண்டிருந்தன.தாயக நிலத்தில் போர் எனும் காரணத்தை கொண்டு ஒரு தொகுதி மக்கள் புலம்பெயர்ந்தாரகள்.ஆனால் இந்தப் பேராளிகள் அந்த புலம்பெயர்ந்தவர்களுக்கான தாயக விடுதலைக்காகவும் தம்மை தம் வாழ் நாளை களத்தில் அர்ப்பணித்துக்கொண்டிருந்தார்கள்.புலம்பெயர்ந்தவர்களும் அந்தந்த தேசங்களில் பொருளாதாரத்திலும் கல்வி பிற துறைகளிலும் தம்மை நிலை நிறுத்தக்கற்றுக்கொண்டார்கள்.மட்டுமன்றி அவர்களின் அடுத்த தலைமுறைகளான பிள்ளைகளும் பன்னாட்டு கலாச்சார வாழ்வியலுக்குள் தம் வாழ்வியலை அமைத்துக்கொள்ள தேவையான அடிப்படைகளை ஆதாரங்களை கற்றுக்கொண்டும் சேர்த்துக்கொண்டார்கள்.இந்த அனைத்து சூழல்களிலும் தமிழினத்தின் ஒரு தொகுதி அதாவது போராளிகளும் மக்களும் களத்தில் தொடர்ந்து போராடினார்கள்.அவர்கள் அதற்காக தமது கல்வியை இழந்தார்கள்.அதற்காக தமது எதிர்காலத்திற்கான பொருளாதாரத்தை அர்ப்பணித்தார்கள்.நாளைய நாளுக்காக ஒரு சதக் குற்றியை கூட சேமிக்காத விடுதலை என்ற ஒரே இலக்கை கொண்டு முள்ளிவாய்க்கால்வரை வாழ்ந்தார்கள்.
முள்ளிவாய்க்கால்வரை வீரபுருசர்களாக கொண்டாடப்பட்ட போராளிகளுக்கு பின்பு கிடைத்த தகுதிகள் அன்றாட கூலிகள்.வாழ்வாதரஉதவிக்கானவர்களாகவும்  .மாற்றுவலுவுள்ளோராவும் .படிப்பறிவில்லாதவர்கள்  என பல பெயர்கொண்டு அழைப்பவர்களாக இருக்கின்றார்கள்   

இன்றைக்கு இருக்கின்ற இந்த சமுகத்தில் சரிசமமாக போராளிகள் வாழ முடியாமைக்கு முதல் காரணம் தமது மக்களுக்காகவும் மண்ணுக்காவும் அவர்கள் இழந்த கல்வி.கல்வியின் மூலம் கிடைக்கக்கூடிய தொழில் வாய்ப்புக்கு தேவையான கல்விப்பெறுபேறுகள் பட்டங்கள் போராளிகளிடம் இல்லை.அநேகமாக போராளிகள் கல்வியை இடையிலேயே நிறுத்திக்கொண்டவர்களே   இயக்கத்தின் பயிற்சி பாசறைக்கு சென்றவர்கள்.பெரும்பாலும் கானகங்களுக்குள் தங்கள் இளமையை கழித்தவர்கள்.போர்க்கல்வி ஒன்றே அவர்களது கல்வியாய் இருந்தது.தனது கல்வியை இடையிலேயே   கைவிட்டு தனது இனத்துக்காய் புறப்பட்டு ஒரு இனத்தின் விடிவெள்ளியாய் ஒரு இனத்துக்கான நிழல் அரசாங்கத்தை நிறுவிய பெரும் தலைவன் பிரபாகரனிடம் படிப்பை கைவிட்டுச்சென்ற போராளிகள் ஒழுக்கத்தையும் அர்ப்பணிப்பையும் சத்தியத்தையும் ஒரு இனத்துக்கான சுதந்திரத்தின் தேவையையும் கற்றுக்கொண்டார்கள்.அதுவே போராளிகள் கற்றுக்கொண்ட கல்வி.அதை விட பத்து மொழிகளைகற்றுக்கொண்டோ  பதினைந்து பட்டங்களை பெற்றுக்கொண்டதோ கிடையாது.

எனினும் தலைவர் பிரபாகரன் படிப்பை கைவிட்டு வந்து விடுதலைக்காக போராட வந்த போராளிகளை உலகம் போற்றும் போர் வல்லுந‌ர்களாக   வைத்தியர்களாக பொறியிலாளர்களாக விமான ஓட்டிகளாக காப்பல் ஓட்டிகளாக உலகமே வியந்து பார்த்த நிழல் நிவாகத்தை நடத்தும்   நிவாகிகளாக. விஞ்ஞானிகளாக துறைசார் வல்லுனர்களாக மாற்றினார்.அரசியல் சித்தாந்தம் தெரிந்த அரசறிவியலாளர்களாக மாற்றினார்.அந்தத் தகுதியுடன்தான் ‘போராளிகள் இந்திய இராணுவம் வெளியேறிய பின் காடுகளுக்குள் இருந்து விடுதலைப்புலிகளின் சீருடை தரித்தபடி  மக்களிடம் போராளிகள் வந்தார்கள்.தனது இனத்துக்காக காடுகளுக்குள் நெடுங்காலமாய் வாழ்ந்து காவலரண்களில் நின்று இரத்தமும் உயிர்களும் சிந்தும் நாட்களில் வாழ்ந்து கட்டளைகள் கேட்டு தன்னுடலைகூட இனத்துக்காக வெடித்துச் சிதற தயாராக இருந்த போராளிகளுக்கு எழுத்தும் வாசிப்பும் கூட மறந்திருக்கலாம் தெரியாதும் இருக்கலாம் ஆனால் தன்னினத்தின் தலைவிதியை மாற்றி எழுதும் தகுதியை பெற்றிருந்தார்கள்.

அத்தகைய போராளிகள்தான் இன்றைக்கு வேறு தகுதிகள் நிர்ப்பந்திக்கப்பட்டு இந்த சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.பல வேளைகளில் எந்த மக்களுக்காக போராடினார்களோ அந்த மக்களால் இம்சிக்கவும் படுகின்றார்கள்.களத்திலேய வாழ்ந்த போராளிகளை களமே தெரியாதவர்களாலும்உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்களாலும்  மக்களையும் போராளிகளையும்  மந்தைகளாக நடத்தப்படுகின்ற துரதிஸ்டமும் இந்த சமுகத்தில் உண்டு.இதுமாற்றப்பட வேண்டும்உலகிலேயே விலைமதிக்கமுடியாத உயிரை கொடுக்கத்துனிந்த போராளிகளையும் அப்போராளிகளுக்கு துனையாக இருந்த மக்களையும் மதிக்கத்தெரியாத இனம் விடுதலை பெறுவது கடினம்

SHARE