ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்ரேலியா!

129

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியா அணி வெற்றி பெற்றது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி மற்றும் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 4 ஆவது போட்டி நேற்று நடைப்பெற்றது.

இதில் நாணயச் சுழற்றிசியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஹஸ் ரத்துல்லா மற்றும் முகமது ஷாசத் ஆகியோர் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹஸ்மத்துல்லா ஷகிடி 18 ஓட்டங்களில் வெளியேற, நிதானமாக துடுப்பெடுத்தாடிய ரமத் ஷா 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 38.2 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவுஸ்ரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஆடம் சம்பா மற்றும் கமின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், மார்கஸ் ஸ்டோனிஸ் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 208 என்ற வெற்றி இலக்கை நோக்கி அவுஸ்ரேலிய அணி களமிறங்கியது. அணி சார்பில், தலைவர் ஆரோன் பிஞ்ச், டேவிட் வோர்னர் ஆகியோர் முதலில் களமிறங்கினார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான துவக்கத்தை இவர்கள் வெளிப்படுத்தினார்கள். இவர்களில் ஆரோன் பிஞ்ச் 66 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேற, உஸ்மான் கவாஜா 15 ஓட்டங்களுடனும், ஸ்டிவ் ஸ்மித் 18 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

டேவிட் வோர்னர் 89 ஓட்டங்களுடன் இறுதிவரை சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இறுதியில் அவுஸ்ரேலிய அணி 34.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்று ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. போட்டியின் ஆட்ட நாயகனாக டேவிட் வோர்னர் தெரிவு செய்யப்பட்டார்.

SHARE