பின்லாந்தில் பெண் அமைச்சர்களை பெரும்பான்மையாக கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்பு!

77

வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தில் பெண் அமைச்சர்களை பெரும்பான்மையாக கொண்ட அமைச்சரவை பொறுப்பேறுள்ளது.

இந்த அமைச்சரவை நேற்று(வியாழக்கிழமை) பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பின்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற பின்லாந்து இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் அன்ரி ரீனே பிரதமராக தெரிவானார்.

இந்தநிலையில் அவர் தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுள்ளது.

இவ்வாறு புதிதாக பொறுப்பேற்ற 19 அமைச்சர்களில் 11 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.0

SHARE