வெளிநாட்டுப் பயணங்களை ஆரம்பித்தார் மோடி

86

நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக நாளை மாலைதீவு செல்கிறார்.

அங்கு இருதரப்பு உறவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து மாலைதீவு ஜனாதிபதி இப்ராகீம் சோலிகுடன் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையிலான முதல் சுற்றுப்பயணம் இதுவாகும்.

கடந்த ஆண்டு நவம்பரில் மாலைதீவு ஜனாதிபதி இப்ராகீம் சோலிஹ் பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். எனினும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

தற்போது மேற்கொள்ளும் பயணத்தின் போது இரு நாடுகளுக்கிடையே சில துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாலைதீவில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு உதவுமாறு அந்நாட்டு ஜனாதிபதி கோரிக்கை வைத்துள்ளார். அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கவும் இந்தியா உதவ உள்ளது.

மாலத்தீவு சுற்றுப் பயணத்துக்கு பின் நாளை மறுநாள் பிரதமர் மோடி இலங்கை செல்கிறார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பிறகு அங்கு செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் மோடி ஆவார்.

பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கு இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும் என்பதை வலியுறுத்தும் வகையில் இலங்கைக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார் என வெளியுறவுத்துறை செயலாளர் விஜய கோகலே கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter

SHARE