ஆஸி. அணியுடனான போட்டி – நாணய சுழற்சியில் வென்றது இந்தியா

143

2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண தொடரின் 14 லீக் போட்டியில் விராட் ஹோலி தலைமையிலான இந்தியா அணியும் பின்ச் தலைமையிலான அவுஸ்ரேலியா அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன.

கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இரு அணிகளிலும் இதற்கு முன் விளையாடிய வீரர்களே விளையாடவுள்ளனர். எனவே இரு அணிகளிலும் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை.

இரு அணிகளுமே பலம்வாய்ந்த அணி என்பதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE