தமிழர் நிலம் பறிபோகின்றது சாணக்கியத்தை வெளிப்படுத்தாத தமிழ்த் தலைமைகள்-கஜன்

300

தாயகத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பறிபோய்க்கொண்டிருக்கின்றன. பூர்வீக கிராமங்களுக்கும் குளங்களுக்கும் சிங்களப்பெயர்கள் சூட்டப்படுகின்றன.ஆனால் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்தோடு கூட்டுச்சேர்ந்துகொண்டு கோடிக்கணக்கான நிதியினை பெற்றுக்கொண்டு மக்களை அபிவிருத்தி மாயைக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றனர் என மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜன் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில்

இன்னொரு புறத்தில் நிலம் பறிபோய்க்கொண்டிருக்க எந்த வித போராட்டங்களுமின்றி வெறுமனே ஊடக ஒலிவாங்கிகளுக்கு முன்னிருந்து அடுத்தவரை விமர்சனம் செய்து ஊடகங்களின செய்திகளை நிரப்புகின்றன வேலை நடக்கின்றது.இன்றைக்கு திட்டமிட்டு சிங்களமயமாக்கப்படும் இடங்களில் உடனடியாக சென்று திரண்டு போராடும் நிலையில் மக்கள் பிரதிநிதிகளை காணோம்.அதேவேளை அரசாங்கத்துக்கு துணைபோகின்ற தமிழ் மக்கள் பிரதிநிதிகள் முஸ்லிம்களை போன்று அரசாங்கத்தின் முன் அதிர்ச்சி தரக்கூடிய ஒற்றுமைப்பட்ட தீர்மானங்களை தமிழ் மக்கள் சார்பாக வெளிப்படுத்தும் சாணக்கியத்தையும் காண முடியவில்லை.
வெறுமனே வீதிக்கு கிறவல்போடுவதும் அதை படம்பிடித்து ஊடகங்களில் போடுவதும் தெருவுக்கு மின்குமிழ் போடுவதும் அதை படம்பிடித்து முகநூலில் போடுவதுமாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் உரிமைக்கான போராட்டங்கள் குறுகிப்போயிருக்கின்றன.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து தாய்மார்கள் போராடினார்கள்.கேப்பாப்புலவு நில மீட்புக்காக தொடர்ந்து அம்மக்கள் போராடினார்கள்.ஆனால் இன்றைக்கு அந்த தன்னெழுச்சி போராட்டங்கள் தணிந்து நீத்துப்போக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அபிவிருத்தி கோசங்கள் மேடைகளில் அரசாங்கத்தோடு கூடி நிற்கின்றார்கள்.அந்த அரசாங்கம் ஒரு புறத்தில் கச்சிதமாக தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்குவதுடன் வடக்கு கிழக்கு நிலத்தொடர்பை கூறுபோடும் பாரிய சதித்திட்டத்;தில் ஈடுபட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

SHARE