மக்களுக்காக வீதிக்கு இறங்கிய மஸ்தான் எம்பி

126

மக்களுக்காக வீதிக்கு இறங்கிய மஸ்தான் எம்பி
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் கணேசபுரம் கிராமத்தில் வீட்டுத்திட்டம் கிடைக்காதவர்களின் வீடுகளிற்கு சென்று அவர்களின்  நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார்.
வவுனியா கணேசபுரத்தை சேர்ந்த சுமார் இருபதுக்கு மேற்பட்டவர்கள் நேற்றைய தினம் (10.06) தேசிய விடமைப்பு அதிகார சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன் போது குறித்த இடத்திற்கு வருகை தந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்ததோடு அதிகாரிகளுடனும் தொலைபேசி மூலமாக கலந்துரையாடியிருந்தார்.


இந்நிலையில் இன்றைய தினம் காலையில் குறித்த  கிராமமான கணேசபுரத்திற்கு சென்ற அவர் வீட்டுத்திட்டம் வழங்கப்படாதவர்களை நேரில் அவர்களுடைய விடுகளிற்கே சென்று பார்வையிட்டதுடன் அவர்களுடைய குடும்ப நிலைமைகள் தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தார்.


இதேவேளை அம்மக்களுக்கு சமுர்த்தி திட்டம் வழங்கப்படாமை, அவர்களுடைய கிராம வீதிகள் தொடர்பாகவும் கேட்டறிந்ததோடு குறித்த இடத்தில் இருந்து கொண்டே வவுனியா அராசாங்க அதிபருடன் தொலைபேசி தொடர்பை மேற்கொண்டு அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாக தெரியப்படுத்தியிருந்தார்.
இதேவேளை அக்கிராமத்தில் கொட்டகைகளாக காணப்பட்ட அனைத்து வீடுகளிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேரடியாக சென்று பார்வையிட்டமையை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருந்தனர்.

SHARE