முஸ்லிம்கள்-பிரபாகரனின் தீர்மானம்-முப்பது ஆண்டுகள் கடந்து காலம் அளிக்கும் பதில்-சே.பி-ஈழம்

519

இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்தில் ஊடகங்களில் ஈஸ்டர் குண்டு வெடிப்பு விசாரணை தெரிவுக்குழுவின் முன் தோன்றி அசாத்சாலி அளித்த வாக்குமூலங்கள் அதிர்ச்சி தரும்படி தலைப்புச்செய்திகளாகி இருக்கின்றன.அதாவது குண்டு வெடிப்பு சூத்திரதாரியான பயங்கரவாதி சகரானோடு பல முஸ்லிம் தலைவர்கள் ஒப்பந்தங்களில் இருந்துள்ளனர்.சிறீலங்காவின் பொலிசார் சகரானின் சட்டைப்பைக்குள் இருந்துள்ளனர்.முடிவாக கடந்த காலத்தில் சிங்கள அரசாங்கங்களின் அனுசரணையில் சகரான் ஒரு குட்டி ராஜாங்கத்தை கட்டி வளர்த்து வந்துள்ளார் என்று முடிவெடுக்கவேண்டும்.இப்பொழுது முஸ்லிம் தலைவர்கள் ஒட்டு மொத்தமாக பதவி விலகி தமது சமுகத்தை தாம் காப்பாற்ற இந்த கைங்கரியத்தை செய்ததாக சொல்லி தியாகச்செம்மல்கள் ஆகிவருகின்றனர்.ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல ஆனால் பேரினவாதிகள் மொத்த முஸ்லிம்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றனர் பழிவாங்குகின்றனர் என்று பாராளுமன்றத்திலும் முழங்கியிருக்கின்றனர்.தமக்குள் இருந்த பயங்கரவாதிகளை காட்டிக்கொடுத்து முஸ்லிம் சமுகம் தம் தாய்திருநாடான சிறீலங்காவுக்கான விசுவாசத்தையும் சொல்லியிருக்கினர் என்று நெக்குருகி நிற்கின்றனர்.


ஒரு சில பயங்கரவாதிகளுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பாதிக்கப்படக்கூடாது என்பது உண்மைதான்.ஆனால் முஸ்லிம் மக்களுக்குள் 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் வடக்கில் இருந்து முஸ்லிம்களை அமைதியான முறையில் பத்திரமாக அனுப்பிவைப்பதற்கு முன்பிருந்து இன்றுவரை பயங்கரவாதிகள் இருந்துள்ளார்கள் என்பதையே ஈஸ்டர்குண்டு வெடிப்பும் அதற்கு பின்னராக இன்றுவரை வெளிவரும் செய்திகளும் உறுதி செய்கின்றன.முஸ்லிம்களுக்குள் ஒரு ஆயுத கலாச்சாரம் சகரானின் தொடங்கியதல்ல அது 90களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது.இன்று சிறீலங்காவில் பலர் விழித்துக்கொண்டிருக்கலாம் இஸ்லாமிய அடிப்படைவாத எண்ணங்கள் தொடர்பாக.புலிகளின் தலைமை முப்பது வருடங்களுக்கு முன்னரே

விழித்துக்கொண்டுள்ளது.அத்தகைய இஸ்லாமிய விரோத செயற்பாட்டுக்கும்பல்களை அகற்றுவது விடுதலைப்போராட்டத்தை நகர்த்துவதற்கு தலையை காப்பாற்ற காலை அகற்றுவது போன்ற ஒரு சத்திரசிகிச்சையாக அன்று இருந்தது.2012 நவம்பரில் டி.பி.எஸ் ஜெயராஜ் தனது கட்டுரையில் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒரு இனச்சுத்திகரிப்பு என கண்ணீர் விட்டு கதறுவதுபோல எதுவும் இல்லை என்பதை ஈஸ்டர் குண்டு வெடிப்பு பதில் அளித்திருக்கின்றது.அவ்வாறு வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால் ஜிகாத் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அரச அடிவருடிக்கும்பல்களின் புலிகளுக்கு எதிரான நடடிக்கைகளுக்காக அப்பாவி முஸ்லிம்களும் தங்களின் உயிரை பலியிடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பர்.ஆனால் பிரபாகரனின் தூரநோக்கு முஸ்லிம்களை காப்பாற்றியது.ஆனால் முஸ்லிம்கள் வெளியேற்றத்தை எதிர்மறையாக எடுத்துக்கொண்டது மட்டுமன்றி அன்றைய ஆட்சியாளர்களான ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதத்துள் விழுந்து ஆயுதங்களை பெற்றுக்கொண்டு அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளிலும் கிழக்கு மாகாணத்திலும் தமிழர்களை வேட்டையாடப்புறப்பட்டனர்.ஒரு புறத்தில் ஜிகாத் என்ற முஸ்லிம் தீவிரவாத அமைப்பு சிங்கள அரசாங்கத்தால் தீனி போட்டு வளர்க்கப்பட்டு தமிழர்களை படுகொலை செய்ய ஏவப்பட்டது அதை சிரமேற்கொண்டு முஸ்லிம்கள் செய்தார்கள்.அதற்கு காரணமாக முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியதை கூறி அப்பாவி முஸ்லிம்களுக்கு வெறி ஏற்றினார்கள்.முஸ்லிம்கள் வெறிகொண்டாடினர்.அது 2009 தமிழினப்படுகொலைவரை தொடர்ந்தது.அதன்பின்பு ஐக்கிய நாடுகள் சபையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவுக்கு சார்பாக சாட்சியம் அளிப்பதுவரை நீண்டது.அதே வேளை 90களில் புலிகள் வெளியேற்றியதை சொல்லிசொல்லியே ரிசாத் பதுதீன் கிஸ்புல்லா போன்றவர்கள் தங்களது கஜானாவை நிரப்பியதுடன் தமது அரச சேவகத்தையும் திறம்படவே செய்துவந்துள்ளார்கள்.


புலிகள்-ரணில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த தருணத்தில் பிரபாகரன் முஸ்லிம்கள் வடக்கு கிழக்கில் பங்காளிகள் ஆனால் 1990ல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒரு சத்திரசிகிச்சைக்கு ஒப்பானது என்பதை முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் கக்கீமை அழைத்து கைகுலுக்கி காலத்தின் நிதர்சனத்தை வெளிப்படுத்தினார்.அத்தகைய சூழலிலும் பேச்சுவார்;த்தை மேசையில் புலிகளின் தலைமைப் பேச்சாளரான மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் முஸ்லிம்களுக்குள் இருக்கும் அடிப்படைவாத ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் துணை இராணுவக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்படவேண்டுமென வலியுறுத்தினார்.காரணம் வடக்கு கிழக்கில் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயம் என்ற சிந்தனைக்குள் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை கொண்டு ஒரு பிரிவினையை ஏற்படுத்தி வடக்கு கிழக்கு இனத்தின் பலத்தை சிதைக்கும் முன்னெடுப்பை அடியோடு இல்லாமல் செய்வதே.ஈஸ்டர் குண்டுவெடிப்பை அடுத்து ஊடகங்கள் வெளிப்படுத்தியிருக்கும் ஜிகாத்-ராசிக்-கிஸ்புல்லா மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத சூத்திரதாரிகளின் கடந்த காலச்செயற்பாடுகள் அவர்கள் முஸ்லிம்களுக்கு செய்துள்ள மூளைச்சலவை நடவடிக்கைகள்.முஸ்லிம் இராணுவ துணைக்குழுக்களால் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழர்கள் மீதான படுகொலை நடவடிக்கைகள் என்பன 1990ல் முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டதா சரியா தவறா என்பதற்கு காலத்தின் குரலாய் பதில் அளித்துள்ளன.


அப்பாவிமுஸ்லிம்கள்பழிவாங்கப்படுகின்றனர்.முஸ்லிம்கள் தமது சமுகத்துள் இருந்த பயங்கரவாதிகளை காட்டிக்கொடுத்து தேசத்துக்கு நன்றி செய்துள்ளார்கள் என்று பதவிகளை விலகிய முஸ்லிம் தலைவர்கள் உரத்த தொனியில் முழக்கமிடுவது கடந்த காலங்களோடு பயணித்துப்பார்க்கும்போது பொருத்தமானதா.இன்று அப்பாவி முஸ்லிம்கள் பழிவாங்கப்படுதவற்கான தொடக்கம் சகரானா இல்லை அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதற்கான தொடக்கம் 1990க்கு முன்பிருந்து புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது ஈறாக தொடர்கின்றது அதற்கான காரணம் முஸ்லிம்கள் 2019ல் சகாரானையும் அவன் தோழர்களையும் காட்டிக்கொடுத்ததுபோல கடந்த முப்பது வருடங்களில் காட்டிக்கொடுக்கவில்லை.மாறாக இஸ்லாமிய தீவிரவாத சிந்தனையை வளர்த்தெடுக்க ஒத்துழைத்துள்ளனர்.மட்டு
மன்றி 90களில் புலிகள் பத்திரமாய் வடக்கில் அனுப்பிவைத்தபின் ஓநாயிடம் அடைக்கலம் கோரிய ஆடுகளாய் சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பு சிந்தனைக்கு சேவகர்களாய் மாறினர்.2009வரை சகரான்களை காட்டிக்கொடுக்கவேண்டிய தேவையும் நிர்ப்பந்தமும் முஸ்லிம்களுக்கு இல்லை.சகரான்கள் 2009வரை பரசிவன் கழுத்தில் இருந்த பாம்புகளாய் சிங்கள பேரினவாத்தின் நாயகர்களாக இருந்தனர்.ஜிகாத்-ராசிக்-கிஸ்புல்லா-ரிசாத் இன்னும் பலர் சகரான்கள் இல்லைத்தான் ஆனால் இவர்கள் சகரான்களின் அவதாரங்களே.இந்த அவதாரங்களை பிரபாகரன் அன்றே உணர்;ந்திருந்தார்.இதைதான் இன்று சகரானின் மற்றொரு அவதாரமான அசாத்சாலி என்ற முஸ்லிம் அப்படைவாதி வாக்குமூலத்தில் சொல்கிறது.சகரான் பொலிசாரோடும் இராணுவத்தோடும் முஸ்லிம் அரசியல்வாதிகளோடும் சர்வமயமாகி கடந்த காலத்தில் இருந்தார் என்று.எல்லாற்றையும் அமைதியாக ஒரு புளிய மரத்தடியில் இருந்த கண்ணை மூடி யோசித்தால் ஐக்கிய தேசிய கட்சியின் ரணிலும் தற்பொழுது பொதுஜன பெரமுனவின் மகிந்தராஜபக்சவும் சகரானின் அவதாரங்களே என்பது புலப்படும்.90களிலேயே சகரான்கள் என்ற பயங்கரவாதத்தை முன்னுணர்ந்த பிரபாகரன் அப்பாவி முஸ்லிம்களை பத்திரமாக அனுப்பினார்.அவரை பயங்கரவாதி என்று மொத்த முஸ்லிம்களுக்கும் மூளைச்சலவை செய்தார்கள்.இன்றைக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பயங்கரவாதிகளாக பார்க்கப்படுகின்றார்கள் இதைத்தான் காலம் தரும் பதில் என்றும் சொல்லுவது.சிலவற்றுக்கு மனிதர்களால் பதில் இல்லை.காலமே சிறந்த பதில்.ஆனால் அந்த பதிலை அடைய காத்திருக்கவேண்டும்.1990ல் இருந்து எழுப்பப்பட்ட ஒரு பெரிய வினாவுக்கு 2019ல் காலம் நல்ல பதிலை அளித்திருக்கின்றது.

SHARE