2012 ஆம் ஆண்டே எச்சரிக்கை விடுத்திருந்தேன் – மொஹமட் ரிஸ்வி

73

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே தேசிய தௌஹீத் ஜமாத் தொடர்பான எச்சரிக்கையை புலனாய்வு துறையினருக்கு விடுத்ததாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர் மொஹமட் ரிஸ்வி மௌலவி தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை 2019 ஜனவரியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு சில புகைப்படங்களை ஒப்படைததேன்.

நபி அவர்கள் கற்றுக் கொடுத்த உண்மையான இஸ்லாமை நாங்கள் பிரசங்கித்தோம். ஆனால் ஷஹரான் ஜம்மியத்துல் உலமாவின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தோடு அடில் என்பவர் தன்னை காபிர் என கூறினார்.

ஐ.எஸ். க்கு எதிராக பேசும் உலகின் முதல் முஸ்லிம் மத குருமார்களில் நானே ஒருவன். எங்கள் தாய்நாட்டை பாதுகாப்பதே எனது கடமை. 2014 ஜூலை 7, அன்று வானொலியில் எனது பேச்சு ஒளிபரப்பப்பட்டது. இது அளுத்கம தாக்குதல்களையும் ISIS பற்றியும் இருந்தது.

இதேவேளை இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பேசும் பிக்குகளை நான் வெறுப்பதில்லை. அவர்களுடன் ஒரு உரையாடலை நடத்த நான் விரும்புகிறேன்” என கூறினார்.

SHARE