ஒவ்வொரு வாரமும் ஒருவர் கடனட்டை அளவுள்ள பிளாஸ்டிக்கை உட்கொள்கிறார் : புதிய ஆய்வு தகவல்!

120

உலகிலுள்ள ஒவ்வொருவரும், வாரத்துக்கு 5 கிராம் அளவிலான பிளாஸ்டிக்கை உட்கொள்ளவதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அது, ஒரு கடன்பற்று அட்டையை உண்பதற்கு சமம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு நிதியமான WWF நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த நியு காசல் பல்கலைக் கழகம் அந்த ஆய்வை நடத்தியது. குடிநீர் மூலமாகவே, மிக அதிகமான பிளாஸ்டிக், மனிதர்களின் உடலில் சேர்கின்றது.

அதற்கு அடுத்தபடியாக, shellfish எனப்படும் கிளிஞ்சல் வகைக் கடல் உயிரினங்கள் மூலமாக, பிளாஸ்டிக் மனித வயிற்றுக்குள் செல்கின்றது. அந்தக் கிளிஞ்சல் உயிர்களை மொத்தமாக உட்கொள்வதால், அவற்றின் செரிமான மண்டலத்தில் உள்ள பிளாஸ்டிக், மனிதர்களின் உடலுக்கு உள்வாங்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Image result for plastic in human body credit card

2000 ஆம் ஆண்டுக்குப் (Millennium year) பிந்திய உலகில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கின் அளவு, அதற்கு முந்திய எல்லா ஆண்டுகளிலும் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கின் அளவுக்குச் சமம் என்று ஆய்வு கூறுகின்றது.

குடிநீரில் இருந்து மட்டும் சராசரியாக ஒருவர், 1,769 பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சோதனையிடப்பட்ட குடிநீர் மாதிரிகளில், சுமார் 95 சதவீதம் பிளாஸ்டிக் நுண்ணிழைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஒப்பிடுவதற்கு ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சுமார் 72 சதவீத மாதிரிகளில் மட்டுமே பிளாஸ்டிக் நுண்ணிழைகள் இருந்தன.

பிரதேசத்திற்கு பிரதேசம் பிளாஸ்டிக் கலப்பின் அளவு வேறுபடுகிறதே தவிர, பிளாஸ்டிக் கலப்பு இல்லாத இடம் ஏதுமில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE