தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட நோட்ரே டாம் தேவாலயத்தில் வார இறுதி வழிபாடு!

50

பரிஸின் புகழ்பெற்ற நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து உலகளவில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.

தீ விபத்திற்கு பின்னர் அங்கு முதன்முறையாக இன்று(சனிக்கிழமை) வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

பரிஸின் புகழ்பெற்ற நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக தேவாலயத்தின் கூரை முற்றாக சேதமடைந்தது.

குறித்த தீ விபத்தினைத் தொடர்ந்து தேவாலயத்தில் எந்தவொரு வழிபாடுகளும் நடைபெறவில்லை.

இந்தநிலையில் இன்று நடைபெறவுள்ள வாரயிறுதி வழிபாடுகளில் பங்கேற்பதற்காக 30 பேருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்கள் கட்டாயம் பதுகாப்பு கவசங்கள் அணிந்து செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், இன்று தேவாலயத்தில் நடைபெறவுள்ள வழிபாடுகள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE