பீகாரில் மூளைக் காய்ச்சல்: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

56

பீகாரில் மூளைக் காய்ச்சலினால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட 117 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அம்மாவட்ட சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மூவர் உயிரிழந்துள்ளனர். அதனடிப்படையிலேயே உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் தற்போது இதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளமையால் நாளுக்கு நாள் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன

‘ஒக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் ஒக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக் காய்ச்சலும், கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவியுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE