வவுனியாவிற்கு நான்கு பதக்கங்களை பெற்றுக்கொடுத்து சாதனை படைத்த மாணவிகள்

131

வவுனியாவிற்கு நான்கு பதக்கங்களை பெற்றுக்கொடுத்து சாதனை படைத்த மாணவிகள்
பளுதூக்கும் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களையும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்று வவுனியா மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் நான்கு மாணவிகள் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்கள்.


2019ஆம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி கந்தர்மடம் சிவப்பிரகாச பாடசாலையின் அண்மையில் இடம்பெற்றது. வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மாணவியான நி. சுஸ்மிதாஹினி 59கிலோ எடைப்பிரிவில் 105கிலோ பளுதூக்கி முதலாம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தையும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகளான ச. நிதர்ஷினி 45கிலோ எடைப்பிரிவில் 87கிலோ பளுதூக்கி முதலாம் இடத்தையும்,

ர.தரணியா 45கிலோ எடைப்பிரிவில் 84கிலோ பளுதூக்கி முதலாம் இடத்தையும் , பா.சரண்யா 79கிலோ எடைப்பிரிவில் 65கிலோ பளுதூக்கி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். இம் மூன்று மாணவிகளும் தங்கப்பதக்கங்களையும் பெற்று வவுனியா மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
இம் மாணவிகளுக்கு பயிற்றுவிப்பாளராக ஜீவனின் நெறிப்படுத்தலில் இம் மாணவிகள் தயார் படுத்தப்பட்டு பளுதூக்கும் போட்டிகளில் பற்கு பற்றி நான்கு பதக்கங்களையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE