2020 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் ட்ரம்ப்!

71

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தினை டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பித்து வைத்துள்ளார்.

ஃபுளோரிடாவின் ஓர்லாண்டோ நகரில் இன்று(புதன்கிழமை) அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பித்துள்ளார்.

ஊடகங்களில் வெளியிடப்படும் பொய்யான தகவல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘மேலும் நான்கு ஆண்டுகள்’ மற்றும் ‘அமெரிக்கா’ எனவும் டிரம்பின் ஆதரவாளர்கள் உற்சாகமாய் ஆரவாரம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை சொந்த மாநிலமான ஃபுளோரிடாவில் வெற்றிபெறுவது டிரம்ப்பிற்கு மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE