ஆலயத் திருவிழாவில் சீர்கேடான இனிப்புப் பண்டங்கள் விற்பனை மூவருக்கு எதிராக 15ஆயிரம் ரூபா நீதிமன்றத்தண்டம்

59

ஆலயத் திருவிழாவில் சீர்கேடான இனிப்புப் பண்டங்கள் விற்பனை மூவருக்கு எதிராக 15ஆயிரம் ரூபா நீதிமன்றத்தண்டம்
வவுனியா கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திருவிழாவின் போது சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட மீள்சுழற்சி செய்யப்பட்ட பாத்திரங்களில் உணவுப்பண்டங்களை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யப்பட்டதற்கு எதிராகவும், சுகாதாரத்திற்கு தீங்கான முறையில் உணவுப்பண்டங்களை விற்பனை செய்யப்பட்ட குற்றத்திற்காகவும் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இனிப்புப்பண்டங்களை விற்பனை செய்யும் பெண் உட்பட மூவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின் போது நீதிமன்றத்தினால் இருவருக்கு தலா 6ஆயிரம் ருபாவும் ஒருவருக்கு 3ஆயிரம் ரூபாவும் நீதிமன்றத்தினால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை சுகாதாரப்பரிசோதகர் கே.சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திருவிழாவின் போது மீள் சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாத்திரங்களில் இனிப்புப்பண்டங்களான பூந்தி, தொதோல், தேன்குழல் போன்றவற்றை யாழப்பாணம் பண்டத்தரிப்பிலிருந்து எடுத்து வந்து திருவிழாக்களின் போது நீண்டகாலமாக விற்பனை செய்து வந்தவர்களுக்கு ஏற்கனவே இரண்டு தடவைகள் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உரிய முறையில் தூசு படியாத வகையிலும் திறந்த நிலையில் களஞ்சியப்படுத்தி வாகனத்தில் எடுத்துச் சென்றதும் திறந்த வெளியில் வைத்து இனிப்புப்பண்டங்களை விற்னை செய்ததும் மீள் சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை மீள் சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாத்திரங்களை உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்த முடியாது சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. 
உணவுப்பண்டங்களுடன் சென்று எமது உடலிற்குள் நோய்களை ஏற்படுத்தும் சாத்தியம் காணப்படுகின்றது இதனால் புற்று நோய் உட்பட பல்வேறு நோய்கள் பரவும் ஆபத்தும் காணப்படுகின்றது. இனிப்புப்பண்டங்களை விற்பனை செய்தவர்களும் தன்னவர் சுகாதாரத்தைப்பேணாத நிலையிலும் குறைபாடுகள்

கண்டுபிடிக்கப்பட்டு மூவருக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது இரண்டு எதிரிகளுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளும் தலா 6ஆயிரம் ரூபா தண்டமும் மற்றைய எதிரிக்கு 3ஆயிரம் ரூபா தண்டப்பணமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. திறந்த வெளிகளில் வைத்து உணவுப் பொருட்கள் விற்பனை செய்ய முடியாது மீள் சுழற்சி செய்யப்பட்ட பாத்திரங்களில் உணவுப்பண்டங்களுக்கு பயன்படுத்த முடியாது உணவுப் பொருட்களை அனுமதிக்கப்படும் இடங்களில் செய்து வெளியே கொண்டு வரும்போது உணவுக்குப்பயன்படுத்தும் பாத்திரங்களில் மட்டுமே போட்டு இறுக்கமாக மூடி கொண்டுவரவேண்டும் என்று நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நடவடிக்கையில் ஓமந்தை சுகாதாரப்பரிசோதகர் கே.சிவரஞ்சன், நொச்சிமோட்டை சுகாதாரப்பரிசோதகர் ரி. வாகிசன் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தினால் அழித்துவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை வவுனியா நகர்பகுதியில் இடம்பெற்ற பொசன் பண்டிகையின்போது உணவு விநியோகம் மேற்கொள்ளப்பட்ட இடங்களை வவுனியா சுகாதாரப்பரிசோதகர்களினால் பார்வையிடப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

SHARE