ஆப்கானிஸ்தான் பந்துவீச்சுக்கு இந்தியா தடுமாற்றம் – 225 ஓட்டங்கள் இலக்கு!

112

நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 28ஆவது போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

சௌதம்ரனிலுள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் இந்திய அணி 225 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சுக்குத் தடுமாறியது. இந்நிலையில் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை இந்திய அணி பெற்றது.

அணிசார்பாக அணித் தலைவர் விராட் கோஹ்லி 67 ஓட்டங்களையும், கேதர் யாதவ் 52 ஓட்டங்களையும், லோகேஸ் ராகுல் 30 ஓட்டங்களையும், விஜய் சங்கர் 29 ஓட்டங்களையும் மற்றும் டோனி 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில், குல்படின் நைப், மொஹ்ஹமட் நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அத்துடன் முஜீப் உர் ரஹ்மான், அப்ராப் அலம், ரஷிட் கான் மற்றும் ரஹமற் ஷாஹ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 225 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு விளையாடவுள்ளது.

SHARE