ஆரம்பமாகியுள்ள ஜெனிவா கூட்டத்தொடர் முன்றலில் தமிழினப்படுகொலை நிழற்படங்கள்

141

இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரiவையின் 41வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது.இதில் உலக நாடுகளின் மனித உரிமை ஆர்வலர்கள் ஐநா முக்கியஸ்த்தர்கள் ராஜதந்திரிகள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.இந்த நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த கூட்டத் தொடர்கள் நடைபெறும் வேளையில் உலக நாடுகளின் கவனத்தை பெறும் பொருட்டு சிறீலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப்படுகொலை நிழற்படங்கள் மனித உரிமை செயற்பாட்டாளர் கஜனால் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகின்றன.இன்றும் கூட்டத்தொடர் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை பேரவை முன் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

SHARE