இன்று இரண்டாவது நாளாகவும் ஐநாவின் முன் தமிழினப்படுகொலை நிழற்படங்கள் பார்வைக்கு

519

ஐநா மனித உரிமைப்பேரவையின் 41வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐநா மனித உரிமைப் பேரவையில் நடைபெற்றுவரும் நிலையில் இன்று .இரண்டாவது நாளாகவும் சிறீலங்கா அரசாங்கத்தால் ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தமிழினப்படுகொலைக்கு சாட்சியமான நிழற்படங்கள் ஐநா முன்றலில் பார்வைக்கு வைக்கப்பட்ட தமிழின நீதி கோரும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜனால் கடந்த ஏழு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு செயற்பாடு இன்றும் தொடர்கின்றது.பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் ராஜதந்திரிகள் மனித உரிமைசெயற்பாட்டாளர்கள் கூடுகின்ற இடமான ஐநா மனித உரிமைப் பேரவை முன் தமிழின புகைப்படங்கள் ஈழத்துக்கான நீதி கேட்டு ஏங்கி நிற்கின்றன.