ஜெனிவா உயர்ந்த கட்டிடத்தில் தோன்றிய ஈழத்தின் கண்ணீர்

542

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் 41வது கூட்டத்தொடர் ஜெனிவா ஐநா
மனித உரிமைப் பேரவையின் இன்று ஐந்தாவது நாள் நடைபெற்று வருகின்றது.இன்றும் ஐநா முன்றலில் சிறீலங்கா அரசாங்கத்தால் காலம்காலமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினப்படுகொலை சாட்சிய நிழற்படங்கள் மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜனால் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.இன்று சிறப்பாக ஜெனிவா வருபவர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஜெனிவா ஐநா மனித உரிமைப்பேரவை முன்றலில் உள்ள உயர்ந்த கட்டிடத்தின் முன் தமிழினப்படுகொலை நிழற்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.