ராகுலின் முடிவு துணிச்சல் மிக்கது – பிரியங்கா காந்தி

42

காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தியின் பதவி விலகல் முடிவானது துணிச்சல் மிக்கது என காங்கிரஸின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி பாராட்டியுள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், ராகுல் காந்தி எடுத்திருக்கும் முடிவு துணிச்சலானது. இத்தகைய துணிச்சல் ஒரு சிலருக்கே உண்டு என குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததுடன், எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்திருந்தது.

இதன்காரணமாக ராகுல் காந்தி பதவி விலகுவதாக திட்டவட்டமாக நேற்று அறிவித்திருந்தார்.

இருப்பினும் ராகுல் காந்தி தொடர்ந்தும் காங்கிரஸின் தலைவராக பதவி வகிக்கவேண்டும் என அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE