அதிகாரப்பகிர்விற்கு சூடான் இராணுவம் இணக்கம்!

97

சூடானில் எதிர்க்கட்சியினருடன் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள இராணுவ ஆட்சியாளர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

சூடான் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினர் கடந்த 6 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் போராட்டக் குழுவினருக்கும், இராணுவத்துக்கும் இடையே எத்தியோப்பியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் பிரதிநிதிகள் முன்னிலையில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் கிடைத்த இந்த வெற்றியை எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தேசியக் கொடி ஏந்தி கொண்டாடியுள்ளனர்.

புதிய ஒப்பந்தத்தின்படி, முதல் 18 மாதங்களுக்கு இராணுவத்திடம் இருக்கும் ஆட்சி, பின்னர் சிவில் தலைமையிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

SHARE