மொனராகல வனப்பகுதியில் தீ – கட்டுப்படுத்த முடியாமல் திணறும் தீயணைப்புப் பிரிவு

57

மொனராகலை – மரகலகந்த வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயால் பெருமளவான வனப்பகுதி பாதிப்படைந்துள்ளதாக மொனராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நேற்று மாலை பரவியுள்ள தீயைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் , இராணுவத்தினரும் ஈடுபட்ட போதிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

தீயணைப்பு பணிக்கு விமானப் படையின் பெல்-212 ரக உலங்கு வானூர்தியும் பயன்படுத்தப்பட்டது.

இதனிடையே, தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE