தமிழர் விளையாட்டு விழாவை ஆதரித்தோ நிராகரித்தோ பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை எதையும் அனுப்பவில்லை-புனித பூமி இணையத்தளம்

304

இம்முறை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் நடத்தப்படும் தமிழர் விளையாட்டு விழா தொடர்பில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் எந்தவிதமான அறிக்கையும் எமக்கு இம்முறை அனுப்பிவைக்கப்படவில்லை.சில இணையத்தளங்களில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டு விழாவை புறக்கணிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டி எமது இணையத்தளத்தில் ஏன் அவ்வாறான ஒரு செய்தி பிரசுரிக்கப்படவில்லை என வாசகர்களாலும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களில் பங்கெடுக்கும் முக்கிய பிரமுகர்களாலும் கேட்கப்பட்ட நிலையில் அச்செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மையை நாம் இங்கே விளக்கவேண்டியுள்ளது.

தமிழர் புனர்வாழ்வு கழகத்தால் நடத்தப்படும் தமிழர் விளையாட்டு விழாவை புறக்கணிக்குமாறும் அதற்கு காரணங்களையும் விளக்கி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையானது கடந்த 2014.06.30 நாள் தேதி இடப்பட்டிருப்பது கடித்தலைப்பில் உறுதிப்பட்டுள்ளது.எனவே பழைய அறிக்கையொன்றை எடுத்து மீண்டும் 2019ம் ஆண்டும் தமிழர் விளையாட்டு விழவை புறக்கணிக்குமாறு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வேண்டிக்கொள்வது போன்ற தோற்றத்தை ஏற்பபடுத்த முனைவது என்பது இப்போது நிலத்திலும் புலத்திலும் தமிழர்களுக்குள்ளும் தமிழர் தலைமைகளுக்குள்ளும் தமிழர் அமைப்புக்களுக்குள்ளும் மக்களால் எதிர்ப்பார்க்கப்படுகின்ற காலத்தின் மிக அவசியமுமான மாறாக சிங்கள பேரினவாத அரசாங்கத்தாலும் அதன் கைக்கூலிகளாலும் விரும்படாத தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கின்ற விசமத்தனமான செயலாகவே பார்க்கமுடியும்.

மேற்படி 2014.06.30ம் நாள் தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தால் நடத்தப்படும் பிரான்சு தமிழர் விளையாட்டு விழாவை புறக்கணிக்கும்படி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கேட்டுக்கொண்ட ஆண்டுக்கும் இன்றைக்கும் ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.நிலத்திலும் புலத்திலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பில் அரசியல் ரீதியாக எண்ணப்பாடுகளும் இயங்குநிலையும் மாற்றமடைந்துள்ளன.அதனடிப்படையில்தான் கடந்த ஐந்து ஆண்டுகளில் புலத்தில் உள்ள தமிழ் தேசியம் சார்ந்த அமைப்புக்களுக்குள் ஒற்றுமைப்பட்ட நிலையை நோக்கி நகர வேண்டிய நிலை காலத்தின் நிர்ப்பந்தமாக நிகழ்;ந்துள்ளது.2009க்கு பின் பல்வேறு காரணங்களை காட்டி அதுவரை தமிழீழ தேசிய தலைமையான தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டிலின் கீழ் நிலத்தில் இருந்து வழங்கப்படும் கட்டளைகள் அறிவுரைக்கு அமைய செயற்பட்டு வந்த புலம்பெயர் அமைப்புக்கள் எதிர்பாராத வகையில் தமக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி அதற்கு காரணங்களையும் வகுத்துக்கொண்டு தனித்து தனித்து இயங்கும் நிலை ஏற்பட்டு வந்தது.இந்த நிலைக்கு ஒருவகையான புரிந்துணர்வு இன்மையும் காரணமாக அமைந்தது.இந்த நிலை தமிழர்களை நிலத்தில் வீழ்த்தியதாய் கொக்கரித்த சிங்களப் பேரினவாதத்துக்கு ஆறுதலும் மகிழ்ச்சியுமாய் அமைந்தது.

புலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தூரநோக்கோடு உருவாக்கப்பட்டு இயங்கி வந்தவற்றின் வலையமைப்புக்கள் 2009க்கு பின் படிப்படியாக செயலிழந்து போவதை சிங்களப் பேரினவாதம் விரும்பியது.அதற்கான வேலைத்திட்டங்களையும் அது செய்தது.மாறாக பழம் நழுவிப்பாலில் விழுந்த கதையாக தாமாகவே முரண்பட்டுக்கொண்டு சிதைவடைந்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் உடைந்து போனமையானது சிங்களப்பேரினவாதத்துக்கு இரட்டிப்பு வெற்றியை அளித்தது.எனவே இந்த சூழ்நிலைகள் நிலவிய காலத்தில்தான் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் விடப்பட்ட 2014ம் ஆண்டு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நடாத்தும் தமிழர் விளையாட்டு விழா தொடர்பான பழைய அறிக்கையை 2019ம் ஆண்டு புலம்பெயர் அமைப்புக்கள் ஒற்றுமை நிலைக்குள் வரத் தொடங்கி கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரான்சில் சகல அமைப்புக்களினதும் ஒருங்கிணைந்த ஏற்பாட்டு நிகழ்வாக நடைபெற்ற நிலையில் அவ்வாறான ஒற்றுமையை சிதைக்கும் பொருட்டு விசமத்தனமாக அறிக்கையை பிரசுரித்துள்ளதாக உண்மைத் தன்மையை கண்டறிய முடிந்துள்ளதுடன் அதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய ஊடகக்கடமையும் எமக்கு ஏற்பட்டது.
எனவே இம்முறை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தமிழர் விளையாட்டு விழா தொடர்பில் ஆதரித்தோ நிராகரித்தோ பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு எந்தவிதமான உத்தியோக பூர்வ அறிக்கையையும் எமது புனித பூமி இணையத்தளத்திற்கு அனுப்பிவைக்கவில்லை என்பதை அனைவருக்கும் நாம் தெரியப்படுத்துகின்றோம்.இதே வேளை நிலத்திலும் புலத்திலும் தமிழ் தேசிய பலத்தை சிதைக்கும் ஒற்றுமை இன்மையை அகற்றி கொள்கை வழுவாத தமிழ்த் தேசிய உணர்வாளர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரும் தமிழர் ஜனநாயக பலத்தை தமிழகத்தின் ஆதரவையும் பெற்று சமகால சர்வதேச அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப உருவாக்கும் பணிகளை ஊக்குவிப்பதில் புனித பூமி இணையத்தளம் முன்னின்று தார்மீக ஆதரவை வழங்கும் என்பதையும் இங்கே சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.
நன்றி
புனித பூமி இணையக் குழுமம்

SHARE