உரிமைகளுக்காக போராடும் முகிலன்களை பைத்தியக்காரர் ஆக்க முனைகின்றன ஏகாதிபத்தியங்கள்-ஈழ மக்கள் சார்பாக கஜன்

183

மனித உரிமை ஆர்வலரும் சூழலியல் போராளியுமான முகிலன் இன்றைக்கு சிறைக்குள் தள்ளப்பட்டு அவர் மீது அவதூறுகளை கொட்டுவதில் ஆதிக்க சக்திகள் முனைவதை நாம் காண்கிறோம்.சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் அணு உலைகள் நச்சு ஆலைகளினால் மக்களுக்கும் சூழலுக்கும் ஏற்படப்போகின்ற பேராபத்தை தடுக்க முனைந்தவர்களை கொலை செய்தவர்களை எதிர்த்தும் ஆலைகளின் பின்னால் உள்ள நிலச்சுரண்டல் சக்திகளை எதிர்த்தும் குரலெழுப்பிய காரணத்திற்காக கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு இன்று வெளியே கொண்டுவரப்பட்டுள்ள முகிலனை ஒரு பைத்தியக்காரனாக்க ஆதிக்க சக்திகள் விளைகின்றன என மனித உரிமைச்செயற்பாட்டாளரும் தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி போராடி வருபவருமான கஜன் தெரிவித்துள்ளார்.

இன்றைக்கு உலகில் மனித குலத்திற்கு தீங்கு விளைக்கும் அழிக்கும் அணுக்குண்டுகள் கொத்துக்குண்டுகள் இராசாயன குண்டுகளை தயாரிக்கும் வல்லரசுகள் அதை எதிர்க்கும் சிறுபான்மை சமுகங்களை அடக்கு முனைவதுடன் உரிமைகளுக்கான நியாயமான போராட்டங்களுக்கு பயங்கரவாத மற்றும் பைத்தியக்கார பட்டம் சூட்டி அழிக்கமுனைவதை பார்க்கின்றோம் இன்றைக்கு தமிழகத்தின் சூழலியல் போராளி முகிலன் விடயத்திலும் அதுவே நடக்கின்றது.முகிலன் மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் இத்தகைய கொடுரமான மனித குலத்திற்கு எதிரான அடக்குமுறைக்கு அனைவரும் திரண்டு நீதி கேட்பது அவசியம் என கஜன் மேலும் தெரவித்துள்ளார்.

SHARE