போராட்டத்தில் குதிப்போம் என்ற மாவையும் சம்மந்தரும் எம்மை கைவிட்டனர்-கேப்பாப்பிலவு மக்கள் விசனம்

72

தமது சொந்த வாழ்விட நிலங்களை மீட்டுத்தரக்கோரி கடந்த 863 நாட்களாக முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவ முகாம் முன்பாக குந்தியிருந்து அதிலேயே சமைத்து உண்டு குளிரிலும் பனியிலும் கொடும் வெயிலிலும் மழையிலும் தொடர்;ந்து போராடிவருகின்றார்கள்.ஆனால் 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இம் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக 2018ல் ஒரு தொகுதி மக்களின் நிலம் இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்டது.மிகுதி நிலம் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் காணிகள் விடுவிக்கப்படாவிட்டால் தானும் வந்து மக்களுடன் போராட்டத்தில் குதிப்பதாக மாவை சேனாதிராசா பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார் ஆனால் இன்னமும் எங்களுடன் வந்து அவர் போராட்டத்தில் குதிக்கவில்லை.இதே வேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனும் காணிகளை விடுவித்து தருவதாக எமக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.ஆனால் அவை எதுவும் நிறைவேற்றப்படாமல் எம்மை எமது அரசியல் தலைவர்கள் எம்மை கைவிட்டுள்ளனர்.

இதே வேளை வடக்கு மாகாண ஆளுனருடன் நாம் சந்திப்பை மேற்கொண்டபோது அவரால் தரப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என இன்று 863வது நாளாக கிழிந்து தொங்கும் கொட்டகைகளுக்குள் இருந்து கொண்டு போராடிவரும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

SHARE