பிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டி 2019

155

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டி 2019 ஆம் ஆண்டு.  26 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இவ் மெய்வல்லுனர் போட்டிகள் வரும் 13.07.2019 சனிக்கிழமை காலை ஆரம்பமாகின்றன. இப்போட்டிகள் முறையே சார்சல் ” நெல்சன் மண்டேலா ” விளையாட்டு அரங்கில் தொடர்ந்தும் 4 நாட்கள்  இடம் பெறவுள்ளன.இப்போட்டிகளில்  ஒன்பது விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றி விளையாடுவதோடு மட்டுமல்லாது எங்கள் நல்வாழ்வுக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களையும் அவர்கள் புகழையும் மகிமைப்படுத்துகின்றார்கள். அனைத்து வீரர்களையும் மக்களையும் விளையாட்டு அரங்குக்கு  வருமாறு அழைக்கப்படுகின்றீர்கள்.(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடகப்பிரிவு )

SHARE