இலங்கை அமெரிக்க உறவு – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

66

அமெரிக்கப் படைத்தளத்தை அமைப்பதற்கு அனுமதியளிக்கக் கூடிய, சோபா உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, இலங்கையில் அதிகரித்து வரும் எதிர்ப்புகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டியே அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தமது சுற்றுப்புறத்தை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா முன்மொழிந்துள்ள சோபா உடன்பாட்டுக்கு இலங்கையில் எதிர்ப்புகள் தோன்றியுள்ளதால், கடந்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தனது பயணத்தை இரத்து செய்திருந்தார் என்றும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சோபா  உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடவிருப்பதாக பொது எதிரணி குற்றம் சுமத்தி வருகிறது. எனினும் அவ்வாறான உடன்படிக்கை எதுவும் இன்னும் கைச்சாத்தாகவில்லை என பிரதமர்  ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கையின் இறைமையை பாதிக்கின்ற எந்த உடன்படிக்கையும் தமது ஆட்சிக் காலத்தில் கைச்சாத்தாகாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE