சஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற சந்தேகநபர் CIDயிடம் ஒப்படைப்பு!

108

தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்றவர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடற்படை புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைய பயங்கரவாத தடுப்பு பிரிவினால் குறித்த சந்தேகத்துக்குரியவர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மஹரகமயில் கைது செய்யப்பட்டார்.

மொஹமட் தாஜுதீன் ஆசிஃப் அஹமட் என்ற 20 வயதுடைய அவர், அரணாயக்க – திப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவாராவர்.

இவர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமுடன் நுவரெலியா – ப்ளக்பூல் முகாமில் பயிற்சிபெற்றவர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE