ஓமந்தையில் 7 மிதிவெடிகள் மீட்பு

42

ஓமந்தையில் 7 மிதிவெடிகள் மீட்பு
வவுனியா ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் அரணுக்கும் இடைப்பட்ட விளக்குவைத்தகுளம் பகுதியிலிருந்து இன்று காலை 7 மிதிவெடிகளை மீட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


வவுனியா ஓமந்தைப்பகுதியில் முன்னர் இராணுவத்தரப்பினர் விடுதலைப்புலிகளின் முன்னரங்கப்பகுதியான விளக்குவைத்தகுளம் சூனியப்பிரதேசப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய பகுதியில் தனியாரிற்குச் சொந்தமான காணி ஒன்றிலில் நேற்று முதல் கனரக இயந்திரத்தின் உதவியுடன் துப்பரவுப்புணிகள் இடம்பெற்று வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை குறித்த பகுதியில் 7 மிதிவெடிகள் காணப்பட்டுள்ளது இதையடுத்து இத்தகவலை பொலிசாருக்கு காணி உரிமையாளரினால் வழங்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் அப்பகுதிக்குச் சென்ற பொலிசார் மிதி வெடிகள் காணப்படும் பகுதியை அடையாளப்படுத்தியதுடன் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

SHARE