அடக்கு முறைகளுக்குள் கன்னியாய்காக மக்கள் போராட்டம் விக்னேஸ்வரன் மன்னாரில் புத்தகவெளியீட்டில்

298

இன்று தமிழர் பூர்வீக நிலமான கன்னியாயில் சிங்களப்பேரினவாதத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக வடக்கு கிழக்கு தமிழுணர்வாளர்கள் திரண்டு சிங்களப்பேரினவாத்தின் பொலிஸ் அதிரடிப்படை நீதிமன்ற தடை என்பவற்றுக்குள் போராட்டத்தை நடத்திவரும் நிலையில் அங்கு கன்னியாய் அமைந்துள்ள நிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் உட்பட்டவர்கள் சிங்களப்பேரினவாத்தோடு கூட்டுச்சேர்ந்துள்ள நிலையில் கூட்டமைப்பின் வழி சரியில்லை என்று சொல்லி கட்சியை ஆரம்பித்த தமிழ் மக்கள் கூட்டணியில் தலைவர் முன்னாள் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கன்னியாயில் நடைபெறும் மிக முக்கியமான ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ளாது மன்னாரில் நடைபெறும் புத்தக வெளியீடு ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்

( இன்று மன்னாரில் விக்கினேஸ்வரன் புத்தகவெளியீட்டில்)


இங்கு புத்த வெளியீட்டாளர்களில் விமர்சனங்கள் கிடையாது ஒரு நில ஆக்கிரமிப்புக்கு எதிரான அதுவும் தமிழர் தலைநகரில் ஒரு பெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த போராட்டத்தின் தலைகாட்டாமல் புத்தக வெளியீட்டில் கலந்துகொள்வது அவரது போராட்ட வலுவற்ற வெறும் வெற்று அறிக்கை கட்சித்தனத்தையே காட்டுகின்றது.

(இன்று திருகோணமலை போராட்டத்தில் திரு கஜேந்திரகுமார் திரு சுபாஷ்)

குறிப்பாக விக்னேஸ்வரன் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை தனது கட்சியினால் எந்தவித போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்து மக்களை திரட்டி போராட்டங்களை நடத்தவில்லை மாறாக காணாமல் ஆக்கப்பட்டவர்களும் வேறு யாருமோ நடத்துகின்ற போராட்டங்களில் போய் நின்று குளிர்காய்ந்து அரசியல் வளர்க்கின்ற நிலைமையையே அவதானிக்க முடிகின்றது.
அண்மையில் அவரது கட்சி சார்ந்த அடிமட்டத் தொண்டர்கள் சிலர் போராட்டங்களை நடத்தவேண்டுமென்று என விக்னேஸ்வரனை கேட்டபோது அதற்கு சிறீலங்கா சட்டத்திட்டங்களை மீறி போராட்டங்களை நடத்த வரமாட்டேன் என்றும் வயோதிப நிலையில் தன்னால் சிறைக்கு செல்லமுடியாது என்றும் பதிலளித்ததாக அவரது தொண்டர்கள் சிலர் விசனமடைந்திருந்தனர் என்பது இங்கு நோக்கத்தக்கது.

SHARE