வவுனியா இறைச்சிக்காக மாடு வெட்டும் இடத்தினை மாற்றுங்கள். நகரசபை உறுப்பினர் ஏ. ஆர். எம். லரீப்

57

வவுனியா இறைச்சிக்காக மாடு வெட்டும் இடத்தினை மாற்றுங்கள்.  நகரசபை உறுப்பினர் ஏ. ஆர். எம். லரீப்
மாடு அறுக்கும் தொழுவத்தினை இடமாற்றி மக்களுக்கு அசெளகரியம் ஏற்படாது பார்க்கவேண்டும் என வவுனியா நகரசபையின் உறுப்பினர் ஏ. ஆர். எம். லரீப் தெரிவித்தார். 
இதேவேளை  இன்று 18.07 நகர சபையின் 16 ஆவது மாதாந்த சபை அமர்வில்  நகர சபை உறுப்பினர் ARM.லரீப் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. 
அவையாவன;எதிர்காலத்தில் நீருக்கான போராட்டம் இடம்பெறலாம் என்பதனை கருத்தில் கொண்டு  நகர சபைக்குட்பட்ட குளங்களை ஆளப்படுத்தி அழகுபடுத்தி அதன் ஊடாக நீரினை சேமிக்க வேண்டும்.  பிரதான வீதியில் நவீன தரத்திலான தெருவிளக்கு புனரமைக்கும் திட்டங்கள் தேவை,வர்த்தக நிலையங்கள் பெயர் மாற்றம் விடயமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். அத்துடன் நீண்ட கால  பிரச்சனையான  அங்காடி வியாபாரிகளுக்கான நிரந்தரமான இட ஒதுக்கீடு செய்யப்பட்ட வேண்டும். 
மாடு அறுக்கும் தொழுவத்தினை இடமாற்றி பொருத்தமான மக்களுக்கு அசெளகரியம் ஏற்படாத ஒரு இடத்தினை தெரிவு செய்ய வேண்டும். பல்துறை விளையாட்டுக்களுக்காக பயன்படுத்தப்படும் நகர சபை மைதானத்தினை புனர்நிர்மானம் செய்யுமாறும் மைதானத்தை சுற்றியுள்ள . கழிவுநீர் காண்கள்  தூய்மைப்படுத்துமாறும் . மைதானத்தினை  வாடகைக்கு பெறுபவர்களுக்கு அதனுடைய ஒழுங்கு விதிமுறைகளை பேணுமாறும் வேண்டிக் கொள்ளுகின்றேன் எனவும் தெரிவித்திருந்தார். 

SHARE