இந்தியாவுடனான பிரச்சினை: விமானங்கள் பறக்க நேரகட்டுப்பாட்டை விதித்தது பாகிஸ்தான்!

45

இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக பாகிஸ்தான் தீர்மானித்துள்ள நிலையில், தங்கள் நாட்டு வான் பகுதியில் விமானங்கள் பறக்க பாகிஸ்தான் நேர கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடைமுறை கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் அடுத்த மாதம் 5ஆம் திகதிவரை ‌பின்பற்றப்படும் என‌வும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஞாயிற்றுக்கிழமை தவிர ஏனைய அனைத்து நாட்களும் அதிகாலை 2.45 ம‌ணி முதல், முற்பகல் 11 மணிவரை ‌விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

லாகூர் பகுதியின் அனைத்து வழித்தடங்களையும் பாகிஸ்தான் விமான போக்குவரத்துத்துறை மாற்றி அமைத்துள்ளது.  வெளிநாட்டு விமானங்கள் 46 ஆயிரம் அடிக்கு கீழே பறக்கவும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் விமானங்கள் வேறு வழித்தடத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் நடைபெற்ற பாலகோட் தாக்குதலை அடுத்து மூடப்பட்ட விமான வழித்தடங்கள் கடந்த மாதம் 16ஆம் திகதி முழுவதுமாக திறக்கப்பட்டன.‌

இந்நிலையில் விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அரசு மீண்டும் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE