காஷ்மீர் மக்களின் நிலை குறித்து அறிய ஒட்டுமொத்த உலகமே காத்திருக்கிறது – இம்ரான் கான்

39

காஷ்மீரில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டவுடன் காஷ்மீர் மக்களுக்கு என்ன நடக்கும் என்பதைக் காண ஒட்டுமொத்த உலகமே காத்திருக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காஷ்மீர் மாநிலத்தில் வன்முறை நிகழும் சந்தர்ப்பத்தில் அதனை தடுக்க வேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டமை குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஜம்மு – காஷ்மீர் பகுதியில் அனைத்துவிதமான தகவல் தொடர்புகளும் முடக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் மக்களுக்கு எதிராக அதிகபட்சமாக இராணுவ பலத்தைப் பயன்படுத்தினால், விடுதலை இயக்கத்தை நிறுத்திவிடலாம் என்று பாஜக அரசு நினைக்கிறதா? போராட்டத்திற்கான வாய்ப்பு அதிகரிக்கத்தான் செய்யும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மிகக்கடுமையான வன்முறை நிகழும் என அச்சப்படுகிறேன். அவ்வாறு நடந்தால், அதைத் தடுக்கவேண்டிய பொறுப்பும், துணிச்சலும் சர்வதேச சமூகத்துக்கு இருக்கிறது ‘ என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

SHARE