வல்லரசு நாடுகளினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழிக்கப்படலாம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

200

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயற்படக் கூடிய முதுகெலும்பு உள்ள தலைமைகள் உருவாகுவதை பிராந்திய வல்லரசுகள் தடுத்து வருவதாகவும், தமிழ் மக்களின் அபிலாசைகளை அடகு வைப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாராக இல்லை.

எதிர்வரும் தேர்தல்களில் வல்லரசு நாடுகளினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தோற்கடிக்ப்படலாம் அல்லது அழிக்கப்படலாம் என்று அக்கட்சியின் தலைவர் கஜேந்திகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கடந்த பத்து வருடங்களாக இந்திய போன்ற வல்லரசு நாடுகள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு முகவர்களாக பயன்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆதரவை இழந்து வருகின்றது என்பதை குறித்த வல்லரசுகள் உணர்ந்துள்ளன.

எனவே தமிழ் மக்கள் மாற்றுத் தரப்பை உருவாக்க முனைகின்ற நிலையில் அந்த மாற்றுத் தரப்பும் தங்களுடைய முகவர்களாக இயங்கக் கூடிய தரப்பாக இருக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் ஒருங்கிணைக்க வல்லரசுகள் முயற்சிப்பதாகவும் கஜேந்திரகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், தமிழ் தேசிய முன்னணியை பொறுத்த வரையில் அனைத்து தரப்புகளும் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மைகளையும் வழங்காமல் தமிழ் மக்களின் வாக்குகளை பெறமுடியாது.

இனியும் தங்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்திவிட்டு வீசும் கருவேப்பிலைகளாக தமிழ் மக்களை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE