இந்திய மீனவர்கள் நால்வர் கைது!

55

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (திங்கட்கிழமை) இரவு மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவேளை கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

கைதான மீனவர்கள் இராமேஸ்வரம் பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த மீனவர்கள் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

SHARE