வவுனியாவில் தொழில் முயற்சியாளர்களுக்கான செயலமர்வு

31

வவுனியாவில் தொழில் முயற்சியாளர்களுக்கான செயலமர்வு
வவுனியாவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான செயலமர்வு ஒன்று இன்று காலை வவுனியா மில்வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.


இலங்கை மத்திய வங்கியும் வடக்கு கிழக்கு மாகாண தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த இச் செயலமர்வின் வரவேற்புரையை கார்த்திகா மற்றும் சுபாஸ்சிங்கம் மேற்கொண்டனர்.


விரிவுரை தொடக்கத்தினை நிதி மற்றும் சந்தைப்படுத்தல், முகாமைத்துவம் வளவாளர்களாக தொழிநுட்பவியல் கல்லூரி பார்த்தீபனும் தொழிநுட்ப சந்தைப்படுத்தல் விரிவாக்கம் சரணியன், தொடர்பாடல் விரிவுரையை ஜனஸ்டின் ஆகியோரும் மேற்கொண்டனர்.


காலை முதல் மாலை வரை இடம்பெற்ற இச் செயலமர்வில் வர்த்தகர்கள், தொழில் முயற்சியாளர்கள், தொழிநுட்ப முயற்சியாளர்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

SHARE