வவுனியா தலைமை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி கடமைகளை பொறுப்பேற்றார்

53

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி கடமைகளை பொறுப்பேற்றார்
வவுனியாவில் இன்று முற்பகல் 11.06சுப நேரத்தில் புதிய தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக என்.பி.வெலிகள தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
களுத்துறை மாவட்டம் ஹொறண பகுதியைச் சேர்ந்த நயன் பிரசன்ன வெலிகள வவுனியாவின் 22ஆவது தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டு இன்று சுப நேரத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தனது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் உறவினர்களுடன் வவுனியாவிற்கு வருகை தந்து சமயத்தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் இன்று முற்பகல் வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

SHARE