காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து வாக்குறுதி அளிப்பவர்களுக்கே எமது வாக்கு – உறவுகள்

47

காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக தீர்வினை வழங்குவோம் என வாக்குறுதி அளிப்பவர்களுக்கே எமது வாக்கு என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஊடக சந்திப்பு  இன்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதன்போதே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யோகராசா கனகரஞ்சினி இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளார்.

அவருக்கும் அவரது குடும்பத்தினருக்குமே எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியும். எனவே எமது உறவுகள் தொடர்பான விடயங்களை வெளியிடவேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உண்டு. யாரும் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் எமது பிள்ளைகள், உறவுகள் தொடர்பாக உறுதியான வாக்குறுதி வழங்குபவர்களுக்கே நாம் வாக்களிப்போம்” என அவர் மேலும் தெரிவித்தா

SHARE