சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வு

41

சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வு
வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவுச்சங்கங்களின் சமாசம் மற்றும் சிக்கன கடனுதவு கூட்டுறவுச்சங்கங்கள் இணைந்து நடாத்தும் சிக்கன கடனுதவு கூட்டுறவுச்சங்கங்களின் சங்கமம் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2மணியளவில் நகரசபை கலாச்சார மண்டபத்தில் சமாசத்தின் தலைவர்  அ.ச. பாரதி ஆனந்தம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஜ. ஹனீபா, கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டறவுச்சங்கங்களின் பதிவாளரும் வடக்கு மாகாணம் பொ. வாகீசன், தலைவர் இலங்கை சிக்கன கடனுதவு கூட்டுறவுச்சங்கங்களின் சம்மேளனம் கலாநிதி பி.ஏ.ஹிரிவந்தெனிய, ஆய்வாளர் கிராமிய பொருளாதார அபிவிருத்தி சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழம் கலாநிதி அகிலன் கதிர்காமர் ஆகியோரும் விஷேட விருந்தினர்களாக வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, வவுனியா, வெங்கலச் செட்டிகுளம், ஆகிய நான்கு பிரதேச செயலாளர்கள், வவுனியா கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி இந்திரா சுபசிங்க ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வவுனியா நகரசபை உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண சிக்கனக்கடனுதவு கூட்டறவுச்சங்களின் சமாசம் நா.சேனாதிராசா, தலைவர் வடக்கு மாகாண சிக்கன கடனுதவு கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனம் பொ.சண்முகசுந்தரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவுச்சமாசங்களின் தலைவர்கள், அங்கத்தவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தினர் தெரிவித்துள்ளனர்.

SHARE