மட்டக்களப்பிலும் செஞ்சோலைப் படுகொலை நினைவுகூரல்

35

செஞ்சோலை படுகொலையின் 13ஆவது ஆண்டு நினைகூரல் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் அதன் அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இன்று (புதன்கிழமை) இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது விமானக் குண்டு வீச்சில்  உயிரிழந்த மாணவிகளின் புகைப்படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன.

SHARE